டெல்லி: தேசிய மீட்புப்படை வீரர்களின் 2வது மலையேற்ற விஜய நிகழ்ச்சி இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது கூறுகையில், தேசிய பேரிடர் மீட்புப்படை (NDRF) பணியார்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தியை கூறுகிறேன். அவர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து இருந்த உதவித்தொகையை உயர்த்த ஒப்புதல் கிடைத்துள்ளது. மீட்புப்பணிகளில் ஈடுபடும் வீரர்களுக்கு வழங்கப்படும் உதவி தொகையானது 40 சதவீதம் வரை உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது […]