சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடியை நாளை (ஆக.22ம் தேதி) அறிமுகப்படுத்துகிறார் விஜய். நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான விஜய்யின் த.வெ.க கட்சி கொடி விழாவிற்கு மாவட்டத் தலைவர்கள் உட்பட 250 நிர்வாகிகள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். காலை 7-க்குள் நிர்வாகிகள் கட்சி அலுவலகத்திற்கு வர வேண்டும் என்றும், காலை 9.15க்கு கொடி அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த விழாவுக்கு செல்போனுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் 40 அடி உயரத்தில் கொடிக் […]
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெற்றி கொடிகட்டு எனும் பெயரில் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் இந்த வார தலைவர் தேர்வுக்கான போட்டி நேற்று நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த வாரத்துக்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்குக்கான போட்டி தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. வெற்றிக்கொடிகட்டு எனும் பெயரில் கொடுக்கப்பட்டுள்ள இந்த டாஸ்கில் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ள போட்டியாளர்களுக்கு தங்கள் அணியில் இருந்து வரும் போட்டியாளர்களின் விளையாட்டை பொருத்து மதிப்புகள் கொடுக்கப்படுகிறது. இது […]
கதர் துணியால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய தேசியக்கொடி லடாக்கின் லே எனும் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. இன்று தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, லடாக்கிலுள்ள லே எனும் பகுதியில் கதர் துணியினால் செய்யப்பட்ட மிகப்பெரிய தேசிய கொடி நிறுவப்பட்டுள்ளது. இந்த கொடி 225 அடி நீளமும், 150 அடி அகலமும், 1000 கொண்டது என கூறப்படுகிறது. காலையில் நடைபெற்ற தேசிய கொடியை நிறுவும் நிகழ்ச்சியில் லடாக் லெப்டினன்ட் கவர்னர் ஆர் கே மாத்துர், […]
நம் நாட்டின் தேசிய கொடியை வடிவமைத்த பிங்கலி வெங்கையா பிறந்த தினம் வரலாற்றில் இன்று. 1876 ஆம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் நாள் ஆந்திர மாநிலத்தில் உள்ள மசூலிப்பட்டினத்தில் பிறந்தவர் தான் பிங்கலி வெங்கையா. இவர் தனது மேல்நிலைப் பள்ளி படிப்பை மசூலிப்பட்டணத்தில் படித்துள்ளார். மேலும் கொழும்பிலும் இவர் உயர் கல்வி கற்பதற்காக சென்றுள்ளார். இவர் பல இடங்களில் பணிபுரிந்து, அதன் பின்பு ஆந்திரப் பிரதேசத்தில் வைர சுரங்கம் மற்றும் பருத்தி ஆராய்ச்சியில் சாதனை படைத்துள்ளார். எனவே […]
ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் வளாகத்தில், இந்துத்துவா குழுவின் நான்கு உறுப்பினர்கள் காவி கொடியசைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தாஜ்கஞ்ச் காவல் நிலைய ஆய்வாளர் சந்திர திரிபாதி கூறுகையில், வலதுசாரி தலைவர் குவாரா தாகூர் தலைமையில் தாஜ்மஹால் வளாகத்தில் 3 பேர் காவி கொடிகளை அசைத்தனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் இந்து ஜாக்ரன் மன்ச் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள். தாகூர் அவர்கள் இளைஞர் பிரிவின் மாவட்ட தலைவராக உள்ளார் என தெரிவித்துள்ளார். […]
கெட்டுப்போன பாலுக்கு மட்டுமல்ல, கெட்டுப்போன ஆளுக்கும் சேர்த்து தான் நடவடிக்கை. நடிகர் மற்றும் பாஜக நிர்வாகியான எஸ்.வி. சேகர், தேசிய கொடி குறித்து பேசி ஒரு விடியோவை வெளியிட்ட வீடியோ வைரலாகி சர்ச்சைக்குள்ளானது. எஸ்.வி சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார், தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டம் உட்பட 2 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்., இந்நிலையில், இதுகுறித்து தயாநிதிமாறன் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘மந்தைவெளியில் ஒரு குறிப்பிட்ட வீட்டில் மட்டும் ஏற்பட்ட குலைநடுங்கும் நிலநடுக்கத்தால் […]
நித்யானந்தா பெங்களூருவை அடுத்த பிடதியில் பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நடத்தி வருகிறார். இந்த ஆசிரமத்தின் கிளைகள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இயங்கி வருகிறது. நித்தியானந்தா ஆபாச வீடியோ, சீடர்கள் பலாத்காரம், பெண் குழந்தைகள் கடத்தல் போன்ற பல சர்சையில் சிக்கி போலீசாரால் தேடப்பட்டு வருகிறார். சமீபத்தில் குஜராத்தில் உள்ள ஆசிரமத்தில் பெண் குழந்தைகளை அடைத்து வைத்து வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாக புகார் எழுந்தது.அந்த புகாரை கொடுத்தவர் நித்தியானந்தாவின் செயலாளர்களின் ஒருவராக இருந்த ஜனார்தன் ஷர்மா. […]
கோவை சிங்காநல்லூரை சார்ந்தவர் அனுராதா. இவர் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்து உள்ளார். கடந்த 11-ம் தேதி வழக்கம் போல காலை வேலைக்கு இருசக்கர வாகனத்தில் கோல்டுவின்ஸ் பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அனுராதா விபத்தில் சிக்கினார். பின்னர் அவரை ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்து காலில் அறுவை சிகிக்சை செய்யப்பட்டு கால் துண்டிக்கப்பட்டது.சாலையில் இருந்த கட்சி கொடி கம்பத்தால் தான் விபத்து நடந்ததாக கூறப்பட்டது. இந்த விவகாரம் […]
தமிழகத்திற்கு தனிக்கொடி வேண்டும் என்ற கோரிக்கை,முதலமைச்சர் பழனிசாமியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். கர்நாடக தினத்தில் அங்குள்ள மக்கள் மற்றும் அரசியல் கட்சினர் தனிக்கொடியை ஏற்றி கர்நாடக தினத்தை கொண்டாடி வருகின்றனர்.இதுபோன்று தமிழகத்திற்கு தனிக்கொடி வேண்டும் என்ற கோரிக்கை வெகுவாக எழுந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.அப்பொழுது அவர் கூறுகையில்,பல்வேறு தரப்பினரிடம் இருந்து தமிழகத்திற்கு தனிக்கொடி வேண்டும் […]
இலங்கையில் சுதந்திர தினம் கொண்டாடப்படு வரும்நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்டு இருந்த தேசிய கொடி இறக்கப்பட்டு, கறுப்பு கொடி ஏற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இலங்கையின் 71வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள தமிழர்கள் சார்பில் சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் சுதந்திர தினத்தையொட்டி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் “எப்போது சுதந்திர தினம்” என குறிப்பிட்டுள்ள கறுப்பு கொடிகளை பறக்க விட்டனர்.பல்கலைக்கழகத்திற்குள் ஏற்றப்பட்டிருந்த தேசிய கொடி இறக்கப்பட்டு […]