கலிபோர்னியாவில் உள்ள செவிலியர் ஒருவர் கடந்த வாரம் பைசர் கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டதை அடுத்து, அவருக்கு தற்பொழுது தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் தனது வீரியத்தை குறைத்துக் கொள்ளாமல் தற்பொழுது வரையிலும் பரவி கொண்டே இருக்கும் நிலையில், பல்வேறு இடங்களில் கொரோனாவிற்கான தடுப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் கண்டறியும் ஆய்வுகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. சில இடங்களில் ஆய்வுகளில் கண்டறியப்பட்ட தடுப்பூசிகள் தன்னார்வலர்களுக்கு செலுத்தப்பட்டு இறுதிக்கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. […]