ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவ கிராமங்களில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேர், ஒரு படகில் கடலில் இரவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படை, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி, 10 பேரை கைது செய்ததோடு, படகையும் பறிமுதல் செய்து எடுத்து சென்றது. கைதான 10 மீனவர்களும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். விசாரணை […]
சென்னை : இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டபோது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மேலும் 13 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அப்போது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் 2 மீனவர்கள் காயமடைந்தனர், பின்னர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கு அரிசியால் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும் இதற்கு மத்திய, […]
ராமேஸ்வரம் : நேற்று முன்தினம் தனுஷ்கோடி தலைமன்னார் இடையே மீன் பிடித்த 34 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது. இந்நிலையில், காரைக்கால் மீனவர்கள் 13 பேரை இன்று அதிகாலை கைது செய்துள்ளது. கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 13 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்துள்ளனர். அப்போது இலங்கை கடற்படையின் துப்பாக்கியை பறிக்க முயன்றதால் எதிர்பாராத விதமாக துப்பாக்கி சூடு நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 2 மீனவர்கள் […]
சென்னை : ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்கள் தனுஷ்கோடி அருகே 25.01.2025 அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். இவர்கள் மீன்பிடித்துள்ள பகுதிகள் இலங்கையின் விரிவாக்கப் பகுதிகளில் உள்ளதால், சட்டப்படி அதற்கான அனுமதி இல்லாமல் மீன்பிடித்ததாக கூறப்படுகிறது. இலங்கைக்கடற்படையினர், சுமூகமாக இந்த மீனவர்களை கைது செய்து, அவர்கள் படகுகளையும் கைப்பற்றியுள்ளனர். இந்த சூழலில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 34 இந்திய மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க மு.க.ஸ்டாலின் […]