நடுக்கடலில் சந்தேகப்படும்படியாக படகு நின்றதாலும், அதனை முன்னேறவிடாமல் தடுக்கவே படகை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் கடலோர காவல்படையினர் சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது . நேற்று நள்ளிரவு மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகு மீது இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர் . இந்த துப்பாக்கி சூட்டில் வீரவேல் எனும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த மீனவர் குண்டடி பட்டு காயமுற்றார். இவருக்கு ராமநாதபுரத்தில் முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, துப்பாக்கி குண்டை அகற்றுவதற்கும், […]