அரபிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘மஹா’ புயலாக மாறி உள்ளதால் குமரி கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசி வருகிறது. இந்நிலையில் குமரியை சேர்ந்த மீனவர்கள் கரைதிரும்பவில்லை என மீனவ தொழிலார்கள் மீன்வளத்துறை இயக்குனர் சமீராவுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்கள். இந்நிலையில் மாயமான மீனவர்கள் பத்திரமாக 300 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருக்கார்கள்.மீனவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து அரசு மற்றும் மீன்வளத்துறைக்கும் செய்தி அனுப்பட்டது என தெரிவித்துள்ளார்கள்.
ஓக்கி புயலுக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 661 மீனவர்கள் கரை திரும்பவில்லை என மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் 400 தமிழக மீனவர்களும் மற்றும் 261 கேரள மீனவர்களும் காணவில்லை என மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 453 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த 362 மீனவர்கள் உட்பட 845 பேர் மீட்கப்பட்டுள்ளனர். முன்னதாக கடந்த மாதம் 30-ம் தேதி குமரி மற்றும் கேரளாவில் ஓகி புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. […]