வாஸ்கோ ட காமா : ஒரு போர்ச்சுகீசிய நாட்டை சேர்ந்தவர் ஆவார். மேலும் இவர்தான் முதன்முதலாக ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்குக்கடல் வழியைக் கண்டுபிடித்தார். குறைந்த காலத்திலேயே இவர் வைசிராய் என்ற பெயரில் 1524ஆம் ஆண்டு போர்ச்சுகீசிய ஆளுமைக்கு உட்பட்ட இந்தியாவின் ஆளுநர் ஆனார்.1498 ம் ஆண்டு மே 17 ல் வாஸ்கொடகாமா இந்தியாவின் கோழிக்கோட்டை அடைந்தார். முதலாம் நெப்போலியன்: நெப்போலியன் பொனபார்ட்அல்லது முதலாம் நெப்போலியன் பிரான்ஸ் நாட்டின் படைத் தலைவனாகவும், அரசியல் தலைவனாகவும் இருந்தவன். தற்கால ஐரோப்பிய வரலாற்றில் இவனுடைய தாக்கம் குறிப்பிடத்தக்கது. இவன் பிரெஞ்சுப் புரட்சியில்ஒரு தளபதி, பிரெஞ்சுக் குடியரசின் ஆட்சியாளன், பிரெஞ்சுப் பேரரசன், இத்தாலியின் […]