உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கடற்படை கமாண்டோ மகள் சுபாங்கி சொரூப் இந்திய கடற்படையின் முதல் பெண் விமான பைலட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கேரளாவில் உள்ள கண்ணூரில் “எழிமலா நேவல் அகாடமி” பயிற்சி மையத்தில் கடற்படை பயிற்சியை பெற்றார். அதேபோல் இதே பயிற்சி மையத்தில் படித்த மூன்று பெண்கள் கடற்படையின் ஒரு பிரிவான போர்தளவாடங்கள் ஆய்வாளரகத்துக்கு (என்.ஏ.ஐ.) முதல் பெண் அதிகாரிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் டெல்லியை சேர்ந்த அஸ்தா செகல், புதுச்சேரியை சேர்ந்த ஏ.ரூபா, கேரளாவை சேர்ந்த எஸ்.சக்தி மாயா ஆகியோர் ஆவர். […]