மல்யுத்த வீராங்கனை அன்ஷு மாலிக் உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த முதல் இந்திய பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார். நார்வேயின் ஒஸ்லோவில் நேற்று நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த அரையிறுதி போட்டியின் 57 கிலோ பிரிவில் ஆசிய சாம்பியனான(20 வயதான) இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் பங்கேற்று,ஜூனியர் ஐரோப்பிய சாம்பியன் சோலோமியா வின்னிக்கை 11-0 என்ற புள்ளிகளில் வீழ்த்தினார். இதன்மூலம்,உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை என்ற வரலாற்றை […]