இந்தியாவின் முதல் தொற்று பாதித்த நபருக்கு மீண்டும் கொரோனா..!
இந்தியாவில் முதல் கொரோனா தொற்று பாதித்த மருத்துவ மாணவிக்கு மீண்டும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள திரிசூரில் முதல் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட மருத்துவ மாணவிக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இன்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து திரிசூர் டி.எம்.ஓ. மருத்துவர் கே.ஜே.ரீனா தெரிவித்துள்ளதாவது, இந்த மருத்துவ மாணவிக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆனால், ஆண்டிஜன் எதிர்மறையாகவும், அறிகுறிகளற்றவராகவும் இருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மாணவி படிப்பு […]