கொரோனா வைரஸ் உலகையே அச்சுருத்தி வருகிறது.தற்போது இந்தியாவில் கொடூரன் கொரோனா வைரசால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137 ஆக உள்ளது. இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் முதல் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.கொல்கத்தாவை சார்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் சமீபத்தில் இங்கிலாந்திலிருந்து மேற்கு வங்காளம் திரும்பினர். இதையெடுத்து அவருக்கு கொரோனா அறிகுறி இருந்த நிலையில் அவரை பரிசோதனை செய்துள்ளனர். பரிசோதனையில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. […]