தொடர்ந்து விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை. விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு விதிமுறை மீறல்களை கண்டறிய சிறப்பு ஆய்வுக்குழுவை நியமித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். தொடர்ந்து விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். வரும் 25-ஆம் தேதி வரை தினசரி ஆய்வு நடத்தி விதிமுறைகள் மீறல்களை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் […]
சென்னை:விருதுநகர் மாவட்டத்தில் நடந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் மற்றும் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரப்பண்ணை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.மஞ்சள் ஓடைப்பட்டி விபத்தில் ஆலை உரிமையாளர் கருப்புசாமி,செந்தில்குமார் உட்பட 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வெடி விபத்தில் […]
தீபாவளி தினத்தன்று சென்னையில் பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 முதல் 8 மணி வரை என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றவுள்ளதாகவும்,இந்த நேரக்கட்டுப்பட்டை மீறி பட்டாசு வெடித்தால் மாநகர காவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் […]
பட்டாசு வெடிக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை பொதுசுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. வருகின்ற நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி திருநாள் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில்,பட்டாசு வெடிக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை மாநில பொதுசுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.அதன்படி, விபத்துக்கள் மற்றும் காயங்கள்: தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது தீக்காயங்கள் மற்றும் காயங்கள் மிகவும் பொதுவானவை. தீபாவளி கொண்டாட்டத்தின் போது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். செய்ய வேண்டியவை: திறந்த வெளியில் பட்டாசுகளை வெடித்து, எளிதில் தீப்பிடிக்காதவாறு பார்த்துக் கொள்ள […]
திருமண ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததால், அங்கு நின்றுகொண்டிருந்த 5 சிறுவர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர்நகரில் நேற்றிரவு திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. அப்பொழுது நடைபெற்ற ஊர்வலத்தின் போது பட்டாசுகள் வெடித்துள்ளனர். அப்பொழுது அருகில் நின்றுகொண்டிருந்த சிறுவர்கள் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த சிறுவர்கள் சவான், உம்மது, ரிஹான், அங்கித் மற்றும் அமீர் என அடையாளம் காணப்பட்டு தற்பொழுது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு […]
தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 14 ஆம் தேதி கொண்டாடவுள்ளனர். இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகளுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும். தீபாவளி என்றாலே பட்டாசு தான் நினைவுக்கு வரும். அந்த வகையில், இந்தாண்டு தீபாவளிக்கான பட்டாசு விற்பனை நவம்பர் 6 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. சென்னை தீவுக்கடலில் நவம்பர் 6 ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை பட்டாசு விற்பனை நடைபெறவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
விருதுநகர் – எரிச்சநத்தம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில், 3 பெண்கள் உட்பட 5பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விருதுநகர் அருகே எரிச்சநத்தம் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 3 பெண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,விருதுநகர் – எரிச்சநத்தம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில், […]
கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, 1 மணி நேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டுள்ளது. பொதுவாக பட்டாசு குடோன்களில் உராய்வுகள் மற்றும் மின்சார கசிவினால் தீ விபத்து ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரையில் கமலா பாஷ் என்பவர் சாமல்பட்டியில் சொந்தமாக பட்டாசு குடோன் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், இன்று எதிர்பாராதவிதமாக இந்த பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டதும், சம்பவ […]
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சிப்பிப்பாறையில் இயங்கி வந்த ஒரு தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர். இந்த தனியார் பட்டாசு ஆலையில் இன்று 30 தொழிலாளர்கள் வேலை செய்து வந்துகொண்டு இருந்தபோது பட்டாசு ஆலையில் இருந்த வெடிமருந்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. இந்த வெடி விபத்து சம்பவத்தில் 5 பேர் பலியாகிய நிலையில், தற்போது மேலும் 3 பேர் உயிரிழந்து, […]
மறுமலர்ச்சி திராவிட முன்னற்ற கழகத்தின் பொது செயலாளர் வைகோ டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆகியோரை சந்தித்து பேசினார்.மோடியை கடுமையாக விமர்சித்து வரும் வைகோவின் இந்த சந்திப்பு அரசியல் கூட்டணியில் புயலை கிளப்பியது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைகோ , சிவகாசியில் பட்டாசு தொழில் பாதிக்கப்பட்டு 8 லட்சம் குடும்பங்கள் நடுத்தெருவில் தெருவில் நிற்கின்றனர். பட்டாசு தொழிலாளர்களின் பிரச்சினை குறித்து மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் […]
பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிட்டது.இதனால் பட்டாசு விற்பனை இந்தாண்டு தீபாவளிக்கு படுமந்தமாகவே இருந்தது.மேலும் இதனால் சிவகாசி உற்பத்தியாளர்கள் மற்றும் அதில் கூலிக்கு வேலை பார்ப்பவர்களின் வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தினர் இன்றுமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இதில் சிவகாசியை சார்ந்த சுற்றுவட்டாரப் பகுதி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.நடைபெற்ற கூட்டத்தில் வெடிகள் உற்பத்திக்கு பேரியம் […]
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி நாடு முழுவதும் இந்தாண்டு பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது.இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்தது.இந்த தீர்ப்பின் எதிரொலியாக பட்டாசு விற்பனை மந்தம் என்று விற்பனையாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வெடிகள் வெடிக்க உச்சநீதிமன்றம் வைத்த வெடியால் 75 விழுக்காடு வெடிகள் விற்காமல் அப்படியே தேங்கியுள்ளதாக வெடி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். தீபாவளியன்று குறிப்பிட்ட அந்த 2மணி நேரமே வெடிகளை வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடும் கட்டுப்பாடு விதித்தது.மேலும்அதிக மாசு வெளியிடும் மற்றும் ஒலி […]
உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி பட்டாசு வெடிக்க கட்டுபாடுகளை விதித்து உத்தரவிட்டது. இதன் படி கட்டுப்பாடுகளை மீறுவோர்கள் மீது நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவால் இந்தாண்டு தீபாவளிக்கு மந்தமான பட்டாசு விற்பணை நடந்தாக வியபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.இன்று தடையை மீறி பட்டாசு வெடித்ததாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு நெல்லையில் நடந்துள்ளது.நெல்லையில் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 6 பேர் கைது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் அனுமதியின்றி […]
எதிர்காலங்களில் தீபாவளிக்கு புத்தாடை உடுத்த கூட தடை வந்து விடும் போல என்று பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார். நாடு முழுவதும் பட்டாசுக்குத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், பட்டாசுகளைத் தயாரிக்க, விற்பனை செய்ய, வெடிக்கத் தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனினும் இதுதொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்தது.மேலும் ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்ய விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் இதனை பின்பற்றாத நிறுவனங்கள் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை […]
ஆன் லைனில் பட்டாசு விற்பனைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தகுந்த உரிமங்கள் இல்லாமல் ஆன் லைனில் பட்டாசுகள் விற்பனை செய்வதை தடை செய்யும்படியும், வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரி, காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையருக்கு இது குறித்த உரிய உத்தரவுகளை பிறப்பிக்குமாறு மனுதாரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோரியிருந்தார். மேலும் இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்த போது ஆன் லைன் விற்பனையை கட்டுப்படுத்த எந்த விதிகளும் இல்லை என அவர்கள் […]