அச்சங்குளம் விபத்தில் உயிரிழந்த 27 பேர் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட காசோலை பவுன்ஸ் ஆனது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி அங்கு உள்ள ஒரு பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆலை நிர்வாகம் சார்பில் 5 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டது. பின்னர், 25 குடும்பங்களுக்கு காசோலை வழங்கப்பட்டது. காசோலை பணமாக மாற்ற பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முயன்றபோது […]