மும்பை நாக்பாடாவில் உள்ள சிட்டி சென்டர் மாலில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதனால், சுமார் 3,500 பேர் தங்கள் பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால், இந்த தீ விபத்தில் இரண்டு தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் ஜே.ஜே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தீ அணைப்பு பணியில் 24 தீயணைப்பு இயந்திரங்கள், 250 தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்த முயற்சி சேர்த்தனர்.