விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டை அருகே ராமு தேவன்பட்டியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் இன்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில், ஆலையில் பணியில் ஈடுபட்டு வந்த 5 பெண்கள் உள்ளிட்ட 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், 5க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பயங்கர வெடி விபத்தால் ஆலையில் உள்ள 4 அறைகள் தரைமட்டமாகின. விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் […]
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்து வெம்பக்கோட்டை அருகே ராமு தேவன்பட்டியில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த 5 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் என 8 பேர் நிகழ்விடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். கரும்பு விவசாயி சின்னத்துக்கு சிக்கல்? வழக்கு தொடர முடிவு – சீமான் பரபரப்பு பேட்டி! இந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து […]
சிவகாசி அருகே சரஸ்வதி பாளையத்தில் பட்டாசு தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்தால் ஒருவர் உயிரிழந்ததாக தகவல். விருதுநகர் மாவட்டம் சிவகாசி சித்துராஜபுரம் அய்யனார் காலனியில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் சின்ன முனியாண்டி என்பவர் உயிரிழந்த நிலையில், வேறு யாரும் விபத்தில் சிக்கி உள்ளார்களா என்று தேடும் பணி நடைபெற்று வருகிறது. வெடி விபத்து ஏற்பட்ட பகுதியில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை […]