மெக்ஸிகோ வில் அவ்வப்போது நகர திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். திருவிழாக்களில் பிரம்மாண்டமாக பட்டாசு வெடிப்பது மெக்ஸிகோ நாட்டிலும் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. மெக்ஸிகோ வின் சாண்டியாகோ டிங்குய்ஸ்டென்க்கோ நகரில் திருவிழாவின் போது பட்டாசு வெடித்ததில் எதிர்பாராத விதமாக விபத்து நடந்துள்ளது. விபத்தில் ஒருவர் உயிர் இழந்ததுடன் 39 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களில் 5 பேரின் நிலை மிகவும் மோசமாகவும், 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும் நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சிவகாசி அருகே வீட்டில் பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், பலர் காயமடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தாயில்பட்டி எஸ்.பி.எம் தெருவில் ஒரு வீட்டில் பட்டாசு தயாரிக்கும் தொழில் இன்று நடைபெற்று வந்தது. அப்போது திடிரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் அங்குள்ள கட்டிடங்கள் பலத்த சேதம் அடைந்தன. இதில் 8 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த திடீர் வெடி […]