ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் தொடர்ந்து தீப்பற்றி எரிவதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களாக ரஜோரி வனப்பகுதியில் எரிந்து வரும் தீயை கட்டுக்குள் கொண்டு வர இயலவில்லை. தீ எரியும் வனப்பகுதியைச் சென்றடைவது கடினமாக இருப்பதால், அதனை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், வனப்பகுதியில் பற்றி எரியும் தீயில் இருந்து வரும் அனலும், புகையும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்து வருகிறது. அப்பகுதியை ஒட்டி உள்ள சாலைகளில், வாகனம் மற்றும் […]