அமெரிக்காவில் வணிக வளாகம் ஒன்றில் பற்றி எரியும் நெருப்பை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள நார்த் பீச் பில்டிங் என்ற அந்த கட்டிடத்தில், உணவு விடுதிகள், மதுபான கடைகள் உள்ளிட்ட ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. அந்த கட்டிடத்தில் எதிர்பாராத விதமாக பற்றிய தீ, கொளுந்துவிட்டு எரிகிறது. தகவலின்பேரில் வந்த 4 தீயணைப்புக் குழுக்கள் நெருப்பை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். தீயணைக்கும் பணிகளில் உதவுவதற்காக, செஞ்சிலுவைச் சங்கத்தினரும் களமிறங்கியுள்ளனர். விபத்தில் இதுவரை […]