பதஞ்சலி நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ 10 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. பதஞ்சலி நிறுவனத்தின் இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா மற்றும் பாபா ராம்தேவ் ஆகியோர், கொரோனா நோய்க்கு தங்கள் நிறுவனம் மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கூறினார்கள். இந்நிலையில், மத்திய ஆயுஷ் அமைச்சகம் எதிர்ப்புத் தெரிவித்தது. பதஞ்சலி நிறுவனம் கொரோனா நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளது என்றால், அதுகுறித்த தகவல்களை அமைச்சகத்துக்கு அனுப்பி அதைப் பரிசோதித்து உண்மையானதுதானா என ஆய்வு செய்த பின்பு தான் விளம்பரம் செய்ய வேண்டும் […]