மாற்றுத்திறனாளி உதவியாளர்கள் 757 பேருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு. அதிக உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் ஒரு உதவியாளரை வைத்து கொள்ளும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாற்றுத்திறனாளி உதவியாளர்கள் 757 பேருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்க ரூ.90.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020 ஏப்ரல் முதல் 2021 ஜூலை வரை கண்டறியப்பட்ட 757 பயனாளர்களுக்கு உதவித்தொகை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நிவர் புயல் காரணமாக வரவேற்பு பந்தலில் காற்றடித்து, கம்பம் சரிந்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தனபால் என்பவரின் மகன் சரவணனுக்கு முதல்வர் நிதி உதவியை அறிவித்துள்ளார். வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு நிவர் புயல் ஏற்பட்டது. இதனால் கடலோரப் பகுதியில் உள்ள மக்கள் எச்சரிக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டு இருந்தாலும் சில இடங்களில் எதிர்பாராத சூழ்நிலை மற்றும் இயற்கை சீற்றம் காரணமாக சிலர் உயிரிழந்தனர். […]