மத்திய அரசு எல்லா திட்டத்திற்கும் பிரதான் மந்திரி திட்டம் என பெயர் வைத்து கொள்கிறது . ஆனால் அதற்கான நிதியில் பெரும்பகுதியை மாநில அரசு தான் கொடுக்கிறது. பெயர் மட்டும் மத்திய அரசு பெயரில். என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விமர்சனம் செய்து இருந்தார். தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டறிந்தனர். அதில்,’ சதீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை முழுதாக கட்டிமுடிக்கப்பட்டதையும், அதே […]
கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தது. இதனையடுத்து,தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதல்வராக ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் அமர்ந்தார்.இதனைத் தொடர்ந்து,நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது. எனினும்,மகளிருக்கு ரூ.1000 எப்போது வழங்கப்படும் என்று அதிமுக,பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தது. இதனிடையே,மகளிருக்கு ரூ.1000 விரைவில் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் ஏன் 2 லேப்டாப் கொண்டு செல்கிறீர்கள் என மத்திய தொழிற்படை போலீசார் கேட்டதால் பரபரப்பு. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், மத்திய தொழிற்படை போலீசார், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் ஏன் 2 லேப்டாப் கொண்டு செல்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘நான் மாநில நிதியமைச்சா், எனது அவசர தேவைக்காக எடுத்துச் செல்கிறேன்’ என விளக்கமளித்துள்ளார். இருப்பினும், அதை ஏற்றுக்கொள்ளாத பாதுகாப்பு […]
காவல்துறைக்கு ரூ.8,930 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தற்போது தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட் உரையில் பேசிய நிதியமைச்சர் கூறியதாவது: “தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.8,930.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும்,தமிழக காவல்துறையில் உள்ள 14317 காலியிடங்கள் நிரப்பப்படும்.அதேபோல, தீயணைப்புத்துறைக்கு ரூ.405.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு பொருளாதாரம் தெரியாது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த 9 ஆம் தேதி வெளியிட்டிருந்தார். இதனையடுத்து,வெள்ளை அறிக்கையில் தமிழ்நாட்டில்தான் சொத்துக்கள் அதிமகாக உள்ளது,அதனால்தான் தமிழகத்திற்கு கடன் நெருக்கடி அதிகமாகவுள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்ததாக கூறி,அதற்கு பதில் அளித்த […]