நாக்பூர் பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக அக்டோபர் 1 முதல் நாக்பூர் பல்கலைக்கழகம் மொபைல் செயலி மூலம் இறுதி ஆண்டு தேர்வுகளை ஆன்லைனில் நடைபெறும் என அறிவித்தது. இதில், சுமார் 78,000 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர் என்று பல்கலைக்கழக தேர்வு வாரியம் தெரிவித்தது. இந்நிலையில், 13 பேரில் ஆசியர்களை தவிர்த்த ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ராஷ்டிரசாந்த் துகாடோஜி மகாராஜ் நாக்பூர் பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு ஆன்லைன் தேர்வுகள் நேற்று ஒத்திவைக்கப்பட்டது. […]
அலகாபாத் பல்கலைக்கழகம் ஆன்லைன் மூலம் இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்த உள்ளது. உத்திரப்பிரதேசத்தின் அலகாபாத் பல்கலைக்கழகம் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை இந்த ஆண்டுஆன்லைன் மூலம் நடத்த முடிவு செய்துள்ளது. இந்தத் தேர்வுகள் செப்டம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்றுநோய் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் பல்கலைக்கழகம் ஏற்கனவே ஒன்பது நாட்களுக்கு பட்டப்படிப்பு தேர்வுகளை நடத்தியது. இந்நிலையில், நிலுவையில் உள்ள தேர்வுகள் இப்போது ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், லக்னோ பல்கலைக்கழகம் […]
மேற்கு வங்கத்தில் இறுதி ஆண்டு தேர்வுகளை அக்டோபர் 1 முதல் 18 நடத்த மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளார். அக்டோபர் 1 முதல் 18 வரை இறுதி செமஸ்டர் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக தேர்வுகளை நடத்துமாறு மேற்கு வங்க முதல்வர் இன்று அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின் அறிவுரையின் படி அக்டோபர் 1 முதல் 18 வரை இறுதி செமஸ்டர் தேர்வுகள் முடிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். […]
டெல்லி பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகள் ஆகஸ்ட் வரை ஒத்திவைக்கப்பட்டன. ஜூலை 10 முதல் தொடங்கவிருந்த இறுதி ஆண்டு தேர்வை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக பல்கலைக்கழகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இறுதி ஆண்டு தேர்வுகள் ஆகஸ்ட் 15 -க்குப் பிறகு தேர்வுகள் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். டெல்லி பல்கலைக்கழகம் ஜூலை 1-ம் தேதி முதல் இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த திட்டமிட்டிருந்தது, ஆனால் மாணவர்களின் எதிர்ப்பின் மத்தியில், தேர்வுகள் ஜூலை […]