அரசாங்கக் கொள்கைகள் ஏதேனும் தவறாகக் கண்டறியப்பட்டால் தங்கள் கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தல். நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான செயல்முறைக்கு முன்னுரிமை அளிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி, உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். மத்திய அமைச்சகங்களின் செயலாளர்கள், எல்லாவற்றையும் வெறுமனே அங்கீகரிக்காமல், எந்தவொரு அரசாங்கக் கொள்கை அல்லது திட்டத்திலும் அவர்கள் கவனிக்கும் குறைபாடுகளைக் தெரிவிக்கமாறும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். காலம் காலமாக நடந்து வரும் வறுமையை சகஜபடுத்துவது […]