13வது ஃப்ஐஎச் ஹாக்கி ஆண்கள் ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டியானது, டிசம்பர் 5 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை, மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்தியா, கனடா, கொரியா, ஸ்பெயின், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, மலேசியா உள்ளிட்ட 16 நாடுகளின் அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி A பிரிவில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, சிலி மற்றும் மலேசியா அணியும், B பிரிவில் எகிப்து, […]