இயக்குனர் வெற்றிமாறன் தற்போது நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி ஆகியோரை வைத்து விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை, கேளம்பாக்கத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ரோப் கயிறு அறுந்து சண்டை பயிற்சியாளர் சுரேஷ் என்பவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இந்த செய்தி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.