ஆண்களுக்கான பீஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2026ம் ஆண்டு நடைபெறவுள்ளது. கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில், மொத்தம் 16 மைதானங்களில் நடைபெறவுள்ள இந்த தொடரில் 48 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. இப்போது இந்த தொடருக்கான தென் அமெரிக்க தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில் மற்றும் அர்ஜென்டினா அணிகள் விளையாடின. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரக்கானா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் தொடக்கத்தில் பிரேசில் அணியின் கையில் இருந்த […]
2026ம் ஆண்டுக்கான பீஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 36 அணிகள் 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ரவுண்ட்-ராபின் முறைப்படி போட்டியிட்டு வருகின்றன. அதன்படி, இந்திய அணி, கத்தார், குவைத் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதில் சுனில் சேத்ரி தலைமையாலான இந்திய அணி, உலக தரவரிசையில் 61வது இடத்தில் உள்ள கத்தாரை நேற்று (செவ்வாய்க் கிழமை) எதிர்கொண்டது. புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் […]
உலகின் மிகப்பெரிய ஆண்கள் கால்பந்து போட்டியான பீஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் 2026ம் ஆண்டு நடைபெறவுள்ளது. சுமார் 48 அணிகள் இடம்பெறும் இந்த போட்டி 16 மைதானங்களில் நடைபெறும். இதில் தற்போது இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு 36 அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த 36 அணிகளும் 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நான்கு அணிகளும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ரவுண்ட்-ராபின் முறையில் நவம்பர் 13 முதல் ஜூன் 11 வரை விளையாடும். இதில் ஒவ்வொரு […]
பிஃபா உலகக்கோப்பைக் கால்பந்து 2026 தகுதிச் சுற்றுப் போட்டிகள் குவைத்தில் நடந்து வருகின்றன. இதில் குரூப்-ஏ பிரிவில் இரண்டாவது சுற்று தகுதிச் சுற்று ஆட்டம், குவைத் நகரில் உள்ள 60,000 இருக்கைகள் கொண்ட ஜாபர் அல்-அஹ்மத் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று (16.11.2023) நடைபெற்றது. இப்போட்டியில் இந்தியா மற்றும் கத்தார் அணிகள் மோதியது. ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணிகளும் கோல் அடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது. முதல் பாதியில் இந்திய அணி தனக்குக் கிடைத்த இரண்டு வாய்ப்புகளைத் […]
பாகிஸ்தான் தலைநகரில் உள்ள ஜின்னா விளையாட்டு மைதானத்தில் கடந்த மாதம் கம்போடியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பாகிஸ்தான் ஆடவர் கால்பந்து அணி உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி வரலாறு சாதனை படைத்துள்ளது. நவம்பர் மாதத்தில் தொடங்கும் இரண்டாவது சுற்றில் பாகிஸ்தான் சவுதி அரேபியா, தஜிகிஸ்தான் மற்றும் ஜோர்டான் அணிகளை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் அணி நவம்பர் 16-ஆம் தேதி அன்று சவுதி அரேபியா உடனும், நவம்பர் 21-ஆம் தேதி தஜிகிஸ்தான் உடனும் மோதவுள்ள நிலையில் […]
பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கரீம் பென்சிமா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு. 2022 FIFA உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவிடம் பிரான்ஸ் தோல்வியடைந்த எதிரொலி காரணமாக நட்சத்திர வீரர் கரீம் பென்சிமா சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனிடையே, உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி உலகக்கோப்பையை வென்றது. இதனால் பிரான்ஸ் அணியின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். […]
FIFA உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த சாதனை 2022ம் ஆண்டில் முறியடிப்பு. 2022-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்கோப்பை தொடர் நவம்பர் மாதம் 20ம் தேதியில் இருந்து விறுவிறுப்பாக நடைபெற்று, நேற்றுடன் நிறைவு பெற்றது. கத்தாரில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் த்ரிலான இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜெண்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது. இது அர்ஜென்டினா அணியின் மூன்றாவது சாம்பியன் பட்டம் என்பதால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கோலாகலமாக இந்த வெற்றியை […]
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கேமரூன் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது சுவிட்சர்லாந்து அணி. FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் கேமரூன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெற்றது. கத்தார் நாட்டில் 2022 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் கடந்த 20-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 2022 FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடரில் குரூப் ஜி-யில் இடம்பெற்றுள்ள சுவிட்சர்லாந்து மற்றும் கேமரூன் அணிகள் […]
உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை அரசு கேபிள் டிவியில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி கண்டுகளிக்கலாம் என அமைச்சர் அறிவிப்பு. கால்பந்து ரசிகர்களுக்கு திருவிழாவாக விளங்கும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் கடந்த 20–ஆம் தேதி தொடங்கியது. இந்த முறை 2022 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளை தனியார் கேபிள் சேனல், டிஸ் மற்றும் ஜியோ சினிமா உள்ளிட்ட ஒரு சில செயலிகளில் நேரலையாக ஒளிபரப்படுகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு […]
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மோதும் அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்ட்டுள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி வருகின்ற நவம்பர்-டிசம்பர் மாதங்களில் கத்தாரில் நடைபெறவுள்ளது. 32 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கு இதுவரை 29 அணிகள் தகுதி பெற்றுள்ளன. 8 பிரிவுகள்: இந்த நிலையில்,உலகக் கோப்பை கால்பந்து போட்டி லீக் சுற்றில் எந்த அணிகள்-யாருடன் மோதுவது என்பது குறித்து குலுக்கல் மூலம் (டிரா நிகழ்ச்சி) நேற்று முடிவு செய்யப்பட்டது.இந்த நிகழ்ச்சி சர்வதேச கால்பந்து […]