சால்ட் பே எப்படி ஆடுகளத்திற்கு வந்தார், எப்படி உலகக் கோப்பையைத் தொட்டார் என்பது குறித்து ஃபிஃபா விசாரிக்கிறது. ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் பிரான்ஸை வென்று அர்ஜென்டினா அணி, சாம்பியன் பட்டம் வென்றது. இந்த உலகக்கோப்பை கொண்டாட்டத்தில், பிரபல செஃப் ஆன சால்ட் பே என்றழைக்கப்படும் துருக்கியைச்சேர்ந்த நுஸ்ரத் கோக்சே, ஃபிஃபா விதியை மீறி உலகக்கோப்பையுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் இன்ஸ்டாவில் பகிர்ந்தது சர்ச்சையை கிளப்பிய்த்து. இது குறித்து ஃபிஃபா, சால்ட் பே எவ்வாறு ஆடுகளத்திற்குள் நுழைந்தார், […]
ஃபிஃபா உலகக்கோப்பையில் இரண்டாவது அரையிறுதியில் இன்று பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகள் மோதுகின்றன. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. 32 அணிகளுடன் தொடங்கிய இந்த உலகக்கோப்பை தொடர் இறுதிப்போட்டியை நெருங்கவுள்ளது. நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இன்று நள்ளிரவு 12:30 மணிக்கு அல் பெய்த் ஸ்டேடியத்தில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் நடப்பு […]
முதல் அரையிறுதியில் குரோஷியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை 2022 தொடரின் முதல் அரை இறுதி போட்டியில், இன்று அதிகாலை 12: 30 மணிக்கு லுசைல் ஸ்டேடியத்தில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முதல் பாதியில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, 34 வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்காக பெனால்டி முறையில் […]
ஃபிஃபா உலககோப்பை கால்பந்துகள் ஸ்பேஸ்-எக்ஸ் இன் உதவியுடன் விண்வெளிக்கு சென்று மீண்டும் கத்தாருக்கே வந்துள்ளன. கத்தாரில் நடந்துவரும் ஃபிஃபா உலககோப்பை தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான அதிகாரப்பூர்வ கால்பந்துகள் எலான் மஸ்கின் ஸ்பேஸ்-எக்ஸ் உதவியுடன் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு மீண்டும் கத்தார் விமான சேவையின்மூலம் போட்டி நடக்கும் கத்தார் கால்பந்து மைதானத்துக்கே திரும்ப வந்துள்ளன. இது குறித்து ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் தனது ட்விட்டரில், ஃபிஃபா உலககோப்பை மற்றும் கத்தார் விமானசேவை ஆகியவற்றுக்கு நன்றி தெரிவித்துள்ளது. உலககோப்பை கால்பந்துகள் விண்வெளிக்கு […]
ஃபிஃபா உலகக்கோப்பையில் முதல் அரையிறுதிப்போட்டியில் அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகள் மோதுகின்றன. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. 32 அணிகளுடன் தொடங்கிய இந்த உலகக்கோப்பை தொடர் தற்போது 4 அணிகளுடன் அரையிறுதி போட்டியை நெருங்கியுள்ளது. இன்று நள்ளிரவு 12:30 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகள் லுஸைல் ஸ்டேடியத்தில் மோதுகின்றன. அர்ஜென்டினா மற்றும் குரோஷியா இரு அணிகளும் தங்களது காலிறுதியில் பெனால்டி முறையில் […]
ஃபிஃபா உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்தை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. கத்தாரில் நடந்து வரும் கால்பந்து உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது கால் இறுதி ஆட்டத்தில் இன்று அதிகாலை 12 30 க்கு லுசைல் ஸ்டேடியத்தில் அர்ஜென்டினா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் 35 வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணியின் மொலினா ஒரு கோல் அடித்தார். முதல் பாதியின் முடிவில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் […]
ஃபிஃபா உலகக் கோப்பையில் முதல் காலிறுதியில் பிரேசிலை வீழ்த்தி குரோசியா அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. கத்தாரில் நடந்து வரும் கால்பந்து உலக கோப்பை 2022 தொடரின் காலிறுதி போட்டிகள் நேற்று தொடங்கின. முதல் போட்டியில் பிரேசில் மற்றும் குரோசியா அணிகள் இரவு 8:30 மணிக்கு எஜுகேஷன் சிட்டி ஸ்டேடியத்தில் மோதின. கோல் அடிப்பதற்கு இரு அணிகளும் கடுமையாக போராடின,இருந்தும் 90 நிமிடங்கள் முடியும் வரை இரு அணிகளும் கோல் இன்றி சமநிலையில் முடிந்தன.அதனால் வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் […]
ஃபிஃபா உலகக்கோப்பையில் இன்று காலிறுதிப்போட்டிகள் தொடங்குகின்றன. கத்தாரில் நடந்துவரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையில் 16 அணிகள் மோதும் சுற்று நிறைவடைந்து, காலிறுதிப்போட்டிகள் இன்று தொடங்குகின்றன. 32 அணிகளுடன் 8 பிரிவுகளாக தொடங்கிய இந்த உலகக்கோப்பை தொடர் முக்கியமான கட்டத்தை நெருங்கியுள்ளது. 16 அணிகள் சுற்றிலிருந்து காலிறுதிப்போட்டிக்குள் 8 அணிகள் தகுதி பெற்றுள்ளன. பிரான்ஸ், போர்ச்சுகல், இங்கிலாந்து, அர்ஜென்டினா, பிரேசில், குரோஷியா, மொரோக்கோ, மற்றும் நெதர்லாந்து அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. இன்று நடைபெறும் முதல் காலிறுதியில் பிரேசில் மற்றும் […]
ஸ்விட்சர்லாந்துக்கு எதிராக ரொனால்டோ, விளையாடாதது அணியின் ஒருவகையான யுக்தி என்று மேலாளர் சாண்டோஸ் கூறியுள்ளார். ஃபிஃபா உலகக்கோப்பையின் 16 அணிகள் மோதும் சுற்றில் நேற்று போர்ச்சுகல் மற்றும் ஸ்விட்சர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆடும் லெவனில் இடம்பெறவில்லை, இதனால் ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். எனினும் இந்த போட்டியில் போர்ச்சுகல் அணி 6-1 என்ற கோல் கணக்கில் ஸ்விட்சர்லாந்து அணியை வீழ்த்தியது. மேலும் ரொனால்டோவுக்கு பதிலாக இறங்கிய 21 வயது இளம் வீரர் […]
ஃபிஃபா உலகக் கோப்பையில் மொரோக்கோ அணி, முதன்முறையாக கால் இறுதிக்கு தகுதி பெற்று வரலாறு படைத்துள்ளது. ஃபிஃபா உலகக் கோப்பை ஆட்டத்தில் மொரோக்கோ அணி 3-0 என்ற கோல்கணக்கில் வலிமை வாய்ந்த ஸ்பெயின் அணியை வீழ்த்தி, கால்பந்து உலக கோப்பையின் வரலாற்றில் முதன்முறையாக காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரின், 16 அணிகள் மோதும் சுற்று ஆட்டத்தில் நேற்று இரவு 8:30 மணிக்கு மொரோக்கோ மற்றும் ஸ்பெயின் அணிகள் எஜுகேஷன் […]
ஃபிஃபா உலகக்கோப்பையில் 16 வருடங்களுக்கு பிறகு கால் இறுதிக்கு போர்ச்சுகல் அணி, தகுதி பெற்றுள்ளது. ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடரில் போர்ச்சுகல் அணி 6-1 என்ற கோல் கணக்கில் ஸ்விட்சர்லாந்து அணியை வீழ்த்தி, 16 வருடங்களுக்கு பிறகு உலகக்கோப்பையின் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையின் தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிவடைந்து தற்பொழுது 16 அணிகள் மோதும் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று அதிகாலை 12 30 […]
ஃபிஃபா உலகக் கோப்பையில் இருந்து நான்கு முறை சாம்பியனான ஜெர்மனி அணி தொடரை விட்டு வெளியேறியுள்ளது. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் தகுதி சுற்று ஆட்டத்தில் இன்று குரூப் இ பிரிவிலுள்ள ஜெர்மனி மற்றும் கோஸ்டா ரிக்கா அணிகள் மோதின. அல்பெய்த் ஸ்டேடியத்தில் இன்று அதிகாலை 12:30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கியது ஆட்டம் தொடங்கிய பத்தாவது நிமிடத்தில் ஜெர்மனி அணியின் செர்ஜ் நப்ரி ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் […]
ஃபிஃபா உலகக் கோப்பையில் இருந்து ஈரான் அணி வெளியேறியதைக் கொண்டாடிய நபர் அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கத்தாரில் நடந்துவரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடரின் தகுதிச் சுற்று ஆட்டத்தில் நேற்று குரூப்-பி விலுள்ள அமெரிக்கா மற்றும் ஈரான் அணிகள் விளையாடியது. இந்த போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் ஈரான் அணி, அமெரிக்காவிடம் தோல்வி அடைந்து நாக் அவுட் கனவை இழந்தது. இதனால் ஈரான் அணி தொடரை விட்டு வெளியேறியது. ஈரானின் இந்த உலகக்கோப்பை தோல்வியை, மெஹ்ரான் […]
ஃபிஃபா உலகக்கோப்பையில் துனிசியாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்த நடப்பு சாம்பியன் பிரான்ஸ். கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் குரூப்-டி விலிருந்து பிரான்ஸ் மற்றும் துனிசியா அணிகள் எஜூகேசன் சிட்டி ஸ்டேடியத்தில் மோதின. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி, ஃபிஃபா கால்பந்து அணிகளின் தரவரிசையில் 30-வது இடம் வகிக்கும் துனிசியாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது. இதில் 1-0 என்ற கோல் கணக்கில் துனிசியா […]
ஃபிஃபா உலகக்கோப்பையில் போலந்து அணியை வீழ்த்தி 5ஆவது முறையாக நாக் அவுட் சுற்றுக்கு அர்ஜென்டினா முன்னேறியுள்ளது. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை 2022 தொடரில் குரூப்-சியில் இடம் பெற்ற லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா மற்றும் போலந்து அணிகள் இன்று விளையாடியது. இந்த ஆட்டம் ஸ்டேடியம் 974இல் நள்ளிரவு 12:30 மணிக்கு தொடங்கியது. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க முடியவில்லை, எனினும் அர்ஜென்டினா அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை […]
ஃபிஃபா உலகக்கோப்பையில் நாக் அவுட் சுற்றுக்கு பிரான்ஸ், பிரேசில் மற்றும் போர்ச்சுகல் உட்பட 7 அணிகள் முன்னேறியுள்ளன. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் தற்போது குரூப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 8 பிரிவுகளாக ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 32 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. குரூப் சுற்று போட்டிகளின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 16 அணிகள் பங்குபெறும் அடுத்த […]
ஃபிஃபா உலகக்கோப்பையின் போர்ச்சுகல்-உருகுவே போட்டியில் வானவில் கொடியுடன் மைதானத்தில் நுழைந்த நபரால் பரபரப்பு. கத்தாரில் நடந்துவரும் ஃபிஃபா 2022 கால்பந்து உலகக்கோப்பையில் போர்ச்சுகல் மற்றும் உருகுவே அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது ஒரு போராட்டக்காரர், நீல நிற சூப்பர்மேன் டி-ஷர்ட்டை அணிந்து கொண்டு அதன் முன்புறம் உக்ரைனைக் காப்பாற்றுங்கள் என்றும், பின்புறம் ஈரானியப் பெண்ணுக்கு மரியாதை என்றும் எழுதி, வானவில் கொடி ஏந்தி மைதானத்தின் நடுவே ஓடினார். ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் கிட்டத்தட்ட 30 வினாடி மைதானத்தில் […]
ஃபிஃபா 2022 உலகக்கோப்பையில் கடைசி நேரத்தில் கோல் அடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய பிரேசில் அணி. கத்தாரில் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று குரூப்-G இல் இடம்பெற்றுள்ள பிரேசில் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் ஸ்டேடியம் 974இல் மோதியது. கடந்த போட்டியில் ஏற்பட்ட கணுக்கால் காயம் காரணமாக நெய்மர் இந்த போட்டியில் களமிறங்க வில்லை. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை, இரண்டாவது […]
ஃபிஃபா உலகக்கோப்பையில் போர்ச்சுகல் அணி, 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை தோற்கடித்து நாக் வுட்டுக்கு தகுதி பெற்றது. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடரின் குரூப்-H இல் இடம்பெற்ற ரொனால்டோவின் தலைமையிலான போர்ச்சுகல் மற்றும் உருகுவே அணிகள் லுஸைல் ஸ்டேடியத்தில் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க முடியவில்லை. இரண்டாவது பாதியில் தொடங்கிய சில நிமிடங்களில் போர்ச்சுகல் அணியின் ப்ருனோ பெர்னாண்டஸ் 54ஆவது நிமிடத்தில் ஒரு […]
2022 ஃபிஃபா உலகக் கோப்பையின் வேகமான கோலை அடித்து கனடா, 36 ஆண்டுகளுக்கு பிறகு தனது முதல் கோலை அடித்தது. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் குரூப்-F இல் கனடா மற்றும் குரோஷிய அணிகள் கலீஃபா சர்வதேச ஸ்டேடியத்தில் மோதின. இந்த போட்டியில் கனடாவின் அல்போன்சா டேவிஸ், ஆட்டம் தொடங்கி 68வது நொடியில் முதல் கோல் அடித்து 2022 ஃபிஃபா உலகக் கோப்பையில் வேகமாக கோல் அடித்துள்ளார். 36 ஆண்டுகளுக்கு […]