ஃபிஃபா விதியை மீறி உலகக்கோப்பையை தொட்ட பிரபல செஃப், சால்ட் பே வை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் பிரான்ஸை வென்று அர்ஜென்டினா அணி, சாம்பியன் பட்டம் வென்றது. கொண்டாட்டத்தில் மூழ்கிய ரசிகர்களுக்கு மத்தியில், பிரபல செஃப் ஆன சால்ட் பே என்றழைக்கப்படும் துருக்கியைச்சேர்ந்த நுஸ்ரத் கோக்சே, ஃபிஃபா விதியை மீறி உலகக்கோப்பையுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் இன்ஸ்டாவில் பகிர்ந்தது சர்ச்சையை கிளப்பையுள்ளது. பிரபல உணவகத்தை நடத்தி வரும் சால்ட் பே, அர்ஜென்டினா […]
ஃபிஃபா உலகக்கோப்பையில் அதிக கோல் அடித்த பிரான்ஸ் அணியின் கிலியான் எம்பாப்பே கோல்டன் பூட் விருது வென்றார். உலகக்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு கோல்டன் பூட், கோல்டன் பால், மற்றும் கோல்டன் க்ளவ் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஃபிஃபா கால்பந்து 2022 உலகக்கோப்பை தொடர் முழுவதும் அதிகபட்சமாக 8 கோல்கள் அடித்த பிரான்ஸ் அணியின் கிலியான் எம்பாப்பே கோல்டன் பூட் விருது வென்றுள்ளார். மேலும் 56 வருடங்களுக்கு பிறகு எம்பாப்பே, உலககோப்பையின் இறுதிப்போட்டியில் ஹாட்ரிக் […]
தான் ஓய்வு பெறப்போவதில்லை என்று மெஸ்ஸி உலகக்கோப்பை வெற்றிக்கு பின் கூறியுள்ளார். உலகக் கோப்பை கால்பந்து 2022 இன் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி, பிரான்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் அர்ஜென்டினா அணி வென்றதற்கு மெஸ்ஸி முக்கிய காரணம் வகித்தார். இறுதி போட்டியிலும், மெஸ்ஸி கோல் அடித்ததன் மூலம் உலகக் கோப்பையின் அனைத்து நாக் அவுட் போட்டியிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெறுகிறார். போட்டிக்கு பிறகு மெஸ்ஸி அளித்த […]
முதல் அரையிறுதியில் குரோஷியாவிற்கு எதிராக கோல் அடித்ததன் மூலம் மெஸ்ஸி, அர்ஜென்டினாவின் முன்னணி கோல் அடித்த வீரரானார். கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடரின் முதல் அரை இறுதியில், இன்று அதிகாலை 12: 30 மணிக்கு அர்ஜென்டினா மற்றும் குரோசியா அணிகள் மோதின. இந்த போட்டியில் 3-0 என்று கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி, குரோசியா அணியை வீழ்த்தி ஆறாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து உள்ளது. இந்த போட்டியில் லியோனல் மெஸ்ஸி […]
ஃபிஃபா 2022 உலகக் கோப்பை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான சிறப்பு பந்து வெளியிடப்பட்டுள்ளது. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா 2022 கால்பந்து உலகக்கோப்பைக்கான இறுதிக்கட்டம் நெருங்கிவிட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடைபெற்றுவரும் இந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிகள் வரும் டிச-14 ஆம் தேதி தொடங்குகிறது. மேலும் இந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான அதிகாரபூர்வ கால்பந்து, அடிடாஸ் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு ‘அல்-ஹிலம்’ என்று அரேபிய மொழியில் பெயரிடப்பட்டுள்ளது. அல்-ஹிலம் என்றால் […]
பிரேசிலை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது குரோஷியா பிரேசில் மற்றும் குரோஷியா இடையே நடைபெற்ற காலிறுதி போட்டியில் 90 நிமிடங்களை தாண்டியும் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்காததால் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது. இந்த கூடுதல் நேரத்தில் பிரேசில் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மர் 106 வது நிமிடத்தில் கோல் அடிக்க பரபரப்பு தொற்றிக்கொண்ட நேரத்தில் குரோஷியா வின் புருனோ 116 நிமிடத்தில் தனது பங்கிற்கு ஒரு கோல் அடிக்க ஆட்டம் ட்ராவானது. அதன் பின்னர் வெற்றியை தீர்மானிக்கும் பெனால்டி […]
ஜப்பான் மற்றும் குரோஷியா இடையேயான நாக் அவுட் சுற்று போட்டி இன்று நடைபெற்றது.ஜப்பான் அணிக்கான முதல் கோலை டெய்சன் மேடா 43 வது நிமிடத்தில் அடித்தார்.2018 உலகக் கோப்பை இறுதிப் போட்டியாளர்களான குரோஷியா சற்றே சுதாரித்துக்கொண்டு 55 வது நிமிடத்தில் இவான் பெரிசிச் மூலம் சமன் செய்தது. 90 நிமிடங்கள் முடிந்தும் இருமுறை கூடுதல் நேரம் கொடுத்தும் 1-1 என்று சமனில் இருந்த ஆட்டம் பெனால்டி ஷூட்-அவுட்டு வரை சென்றது.பெனால்டி சூட்டில் குரோஷியாவின் கோல் கீப்பர் அற்புதமாக […]
இங்கிலாந்து கால் பந்தாட்ட வீரரான ரஹீம் ஸ்டெர்லிங் இங்கிலாந்தில் உள்ள அவரது வீட்டில் துப்பாக்கியுடன் கொள்ளையர்கள் நுழைந்த நிலையில் பிரான்சுக்கு எதிரான காலிறுதிபோட்டிக்கி திரும்புவாரா என சந்தேகம் எழுந்துள்ளது. இங்கிலாந்து முன்கள வீரர் ரஹீம் ஸ்டெர்லிங், ஞாயிற்றுக்கிழமை செனகலுக்கு எதிரான போட்டியில் விளையாடாமல் நாடு திரும்பியிருந்தார்.இப்போட்டியில் இங்கிலாந்து 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஸ்டெர்லிங்,குடும்பத்தினர் வீட்டிலிருந்த போது ஆயுதமேந்திய கொள்ளையர்கள் வீட்டின் உள்ளே நுழைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இங்கிலாந்து சென்ற அவர் […]
இன்று (டிசம்பர் 3) 2022 FIFA உலகக் கோப்பையின் 16-வது சுற்றில் நெதர்லாந்து அமெரிக்காவிற்கு எதிராக 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. முதல் பாதியில் நெதர்லாந்து அணியில் மெம்பிஸ் டிபே மற்றும் டேலி பிளைண்ட் கோல் அடிக்க இரண்டாம் பாதியில் டென்சல் டம்ஃப்ரைஸ் தனது பங்கிற்கு ஒரு கோல் அடிக்க நெதர்லாந்து கோல் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. இரண்டாவது பாதியில் மாற்று வீரர் ஹாஜி ரைட் 76வது நிமிடத்தில் […]
FIFA WORLD CUP 2022 போட்டிகளை அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் SPORTS 18 சேனலில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி கண்டுகளிக்கலாம் கத்தார் நாட்டில் 2022 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் கடந்த 20-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த FIFA WORLD CUP 2022 போட்டிகளை அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் மூலம் SPORTS 18 சேனலில் கூடுதல் கட்டணம் ஏதுமின்றி கண்டுகளிக்கலாம். இதுகுறித்து அமைச்சர் […]