நான் கணித்ததுபடியே மூன்றாவது முறையாக உலக கோப்பையை முத்தமிட்டது அர்ஜென்டினா அணி என ஜெயக்குமார் ட்வீட். உலககோப்பையின் இறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினாக்கு இடையே நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா டைப் பிரேக்கரில் 4-2 என்று கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதுகுறித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், நான் கணித்ததுபடியே மூன்றாவது முறையாக உலக கோப்பையை முத்தமிட்டது அர்ஜென்டினா அணி என வீடியோ பதிவிட்டுள்ளார். […]
உலகக் கோப்பையில் பிரான்ஸ்-மொராக்கோ அரையிறுதியில், கலவரங்களுக்கு முன்னேற்பாடாக 10,000 போலீசார் குவிப்பு. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்று நள்ளிரவு 12:30 மணிக்கு அல் பெய்த் ஸ்டேடியத்தில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியை முன்னிட்டு கலவரங்கள் ஏற்படக்கூடும் என்று அஞ்சி, பிரான்ஸில் முன்னேற்பாடாக 10,000 போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக, பிரெஞ்சு உள்துறை மந்திரி ஜெரால்ட் […]
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டியுடன் ஓய்வு பெறுவதாக லியோனல் மெஸ்ஸி அறிவிப்பு. உலகக்கோப்பை கால்பந்து தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி. உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதி போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸி அறிவித்துள்ளார். கத்தாரில் நடைபெற்று வரும் ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை 2022 தொடரின் முதல் அரை இறுதி போட்டியில், குரோஷியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. […]
முதல் அரையிறுதியில் குரோஷியாவிற்கு எதிராக கோல் அடித்ததன் மூலம் மெஸ்ஸி, அர்ஜென்டினாவின் முன்னணி கோல் அடித்த வீரரானார். கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடரின் முதல் அரை இறுதியில், இன்று அதிகாலை 12: 30 மணிக்கு அர்ஜென்டினா மற்றும் குரோசியா அணிகள் மோதின. இந்த போட்டியில் 3-0 என்று கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி, குரோசியா அணியை வீழ்த்தி ஆறாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்து உள்ளது. இந்த போட்டியில் லியோனல் மெஸ்ஸி […]
முதல் அரையிறுதியில் குரோஷியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா முதல் அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை 2022 தொடரின் முதல் அரை இறுதி போட்டியில், இன்று அதிகாலை 12: 30 மணிக்கு லுசைல் ஸ்டேடியத்தில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முதல் பாதியில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, 34 வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்காக பெனால்டி முறையில் […]
ஃபிஃபா 2022 உலகக் கோப்பை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான சிறப்பு பந்து வெளியிடப்பட்டுள்ளது. கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா 2022 கால்பந்து உலகக்கோப்பைக்கான இறுதிக்கட்டம் நெருங்கிவிட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடைபெற்றுவரும் இந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிகள் வரும் டிச-14 ஆம் தேதி தொடங்குகிறது. மேலும் இந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கான அதிகாரபூர்வ கால்பந்து, அடிடாஸ் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு ‘அல்-ஹிலம்’ என்று அரேபிய மொழியில் பெயரிடப்பட்டுள்ளது. அல்-ஹிலம் என்றால் […]
கத்தாரில் நடைபெறும் ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை 2022 தொடரின் போது மைதானங்களில் மது விற்பனைக்கு தடை. கத்தாரில் இன்னும் இரு தினங்களில் ஃபிஃபா 2022 கால்பந்து உலகக் கோப்பை திருவிழா தொடங்கவிருக்கிறது. இந்த நிலையில் போட்டி நடைபெறும் எட்டு மைதானங்களில் பீர் போன்ற மதுபானம் விற்க கத்தார் அரசு தடை விதித்துள்ளது. ஆரம்பத்தில், ஃபிஃபா(FIFA) ஸ்பான்சர், பட்வைசர் மட்டுமே கத்தார் உலகக் கோப்பை அதிகாரப்பூர்வ மைதானங்களில் விற்க அனுமதிக்கப்பட்ட ஒரே பீர் ஆகும். பட்வைசர் 1986 […]
2022 ஆம் ஆண்டு ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை, கத்தாரில் நவ-20 இல் தொடங்கி டிச-18 வரை நடக்கிறது. உலகெங்கும் பெரும் ரசிகர்களைக் கொண்ட கால்பந்து விளையாட்டின், 22ஆவது ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை திருவிழா நவ-20 ஆம் தேதி கத்தாரில் தொடங்குகிறது. ஒவ்வொரு 4 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் இந்த உலகக்கோப்பை தொடர், அரபு நாடுகளில் முதன்முறையாக நடைபெறுகிறது என்பதால் ரசிகர்கள் பெறும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். மேலும் ஆசியாவில் நடைபெறும் இரண்டாவது கால்பந்து உலகக்கோப்பை தொடர், இதற்கு […]