சென்னை: வடசென்னை உயர்கல்வித்துறை சார்பில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில், ரூ.1,383 கோடி மதிப்பீட்டில் 79 புதிய திட்டப் பணிகளை துவக்கி வைத்து, 29 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர், விழா மேடையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ” விடியலை தருவது தான் உதயசூரியன், சூரியனை பார்த்தால் கண் கூசுபவர்களுக்கு விடியல் தெரியாது. மெட்ராஸ் என்கிற பெயரை சென்னை என மாற்றியவர் கருணாநிதி, சென்னையின் அடையாளங்களை உருவாக்கியது” என்று கூறினார். தொடர்ந்து பேசிய […]
சென்னை : தமிழகம், புதுவையில் கோரத் தாண்டவம் ஆடிய ஃபெஞ்சல் புயல், 12 மனித உயிர்களை பலி வாங்கியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தப் புயல் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு, பெரும்பாலான பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளதாகவும், பாதிப்புக்குள்ளான பகுதிகளில் வசிக்கும் மக்களை இடம்பெயரச் செய்துள்ளனர். புயல் பாதிப்புகள் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள அவர் தற்காலிக சீரமைப்பு பணிக்காக 2,475 கோடி கோரியுள்ளார். முதற்கட்ட கணக்கெடுப்பில் 69 லட்சம் குடும்பங்கள், 2,11,139 […]
சென்னை : ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால், திருவண்ணாமலை தீப மலை அடிவார பகுதிகளில் நேற்று முன் தினம் ஏற்பட்ட நிலச்சரிவில், கவுதம், இனியா, மகா, வினோதினி, ரம்யா என 4 குழந்தைகள் மற்றும் ராஜ்குமார்-மீனா தம்பதி என மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். தற்பொழுது, மண்சரிவில் சிக்கிய ஒவ்வொருவரின் உடல்களாக மீட்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீதமுள்ள இருவரின் உடல்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். ஃபெஞ்சல் புயல் […]
சென்னை : வங்கக்கடலில், உருவாகி இருக்கும் ஃபெஞ்சல் புயல், சென்னைலியிருந்து 140கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது, 12கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், இன்று மதியம் அல்லது மாலையில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெஞ்சல் புயலின் எதிரொலியாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழையானது கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் வெள்ள அபாய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களுக்கு தலா 30 பேர் […]
சென்னை : வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், சென்னையில் இருந்து 480 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. கடந்த சில மணி நேரங்களாக நகராமல் இருந்த நிலையில், தற்போது மணிக்கு 2 கி.மீ வேகத்தில் மிகவும் மெதுவாக நகர தொடங்கியது இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், புயல் உருவான […]
சென்னை : வங்கக்கடலில் புயலாக உருவெடுக்க உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி, மாலை 4 மணி வரை 13 மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையிலிருந்து 530 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு தென்திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைக் கொண்டுள்ளது. இது, 15கி.மீ வேகத்தில் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது எனவும் அடுத்த 6 […]
சென்னை : வங்கக் கடலில் உருவாக உள்ள புயல் பரங்கி – சென்னையை இடையே நவம்பர் 30இல் கரையைக் கடக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாள ர்பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக உருமாறலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை மாறிமாறி நகர்ந்து வந்ததால், அது எப்போது கரையை கடக்கும்? எங்கு கரையை […]