திருவனந்தபுரம் அருகே உள்ள பாலராமபுரம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் கேரளா அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். கடந்த சில நாள்களுக்கு முன் பாலராமபுரம் அருகே இவர் பேருந்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்தபோது பைக்கில் சென்ற ஒருவர் மீது மோதியதில் அவர் உயிரிழந்தார். இந்த வழக்கு திருவனந்தபுரம் முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் இந்த வழக்கில் டிரைவர் மணி மற்றும் ஒரு சாட்சியிடம் விசாரணை நடத்தப்பட இருந்தது. […]