கொள்ளு உண்பதால் கிடைக்கும் கணக்கில்லா நன்மைகளை அறியலாம் வாருங்கள்!
குதிரைக்கு கொடுக்கப்படும் உணவாக இருந்தாலும் கொள்ளு என்பது மனிதர்களுக்கும் அற்புதமான ஒரு உணவாகும். இதன் மூலம் உடலின் சக்தியை அதிகரிப்பதுடன் தேவையற்ற கொழுப்பைக் கரைக்கக் கூடிய சக்தியும் இதில் அதிகம் உள்ளது. இதனால் தான் கொழுத்தவனுக்கு கொள்ளு மட்டும் என்ற பழமொழியும் கூறப்படுகிறது. இந்த கொள்ளுவின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து அறியலாம் வாருங்கள். கொள்ளுவின் ஆரோக்கிய நன்மைகள் கொள்ளுவில் கால்சியம், மெக்னீசியம், புரதம், இரும்புச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற பலவிதமான சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. […]