புதுக்கோட்டையில், தந்தை-மகன் விஷம் அருந்தி தற்கொலை. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள மேல்நிலைப்பட்டியை சேர்ந்தவர் பாலசந்திரன்(54). இவரது மகன் அருண்குமார்(24). இவர்கள் இருவரும் நேற்று அவர்களது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்து வந்த கே.புதுப்பட்டி போலீசார், இருவரின் உடலையும், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், […]