திருவள்ளூரில் தந்தை பெரியார் சிலை சேதம்! மர்மநபர்கள் அட்டகாசம்!
திருவள்ளூரில் தந்தை பெரியார் சிலை சேதம். கடந்த சில நாட்களாகவே மரியாதைக்குரிய தலைவர்களின் சிலையை மர்மநபர்கள் அவமதித்து வருகின்றனர். இதற்கு பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேருந்து நிலையத்தில் உள்ள தந்தை பெரியார் சிலை மர்மநபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. பெரியாரின் வெண்கல சிலையின் முகப்பகுதி, கண்ணாடி போன்றவற்றை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.