பின்லாந்து பிரதமரான சன்னா மரின் தங்கள் நாட்டில் பேறுகால விடுப்பு கொள்ளகையில் மாற்றம் கொண்டு வரப்போவதாக அறிவித்தார். அதில் குழந்தை பிறப்புக்கு பின், தாயை போலவே தந்தைக்கும் 164 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படும் என அறிவித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பின்லாந்து பிரதமராக 34 வயதான பெண் சன்னா மரின் என்பவர் பதவியேற்றார். சில வாரங்களுக்கு முன்பு உலக பொருளாதார கூட்டமைப்பில் பேசிய சன்னா மரின், பாலின சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில் […]