திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் அமைக்க செய்யாறு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய நிலையில், அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ‘செய்யாறு சிப்காட் 3-வது அலகு’ விரிவாக்கத் திட்டத்துக்காக சுமார் 3,000 ஏக்கர் விளை நிலங்கள் பறிக்கப்படுவதாகக் குற்றம்சாட்டி பல்வேறு கிராம விவசாயிகள் ஒன்றுகூடி தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த 2-ம் தேதி விளை நிலங்களை கையகப்படுத்தக் கூடாது, சிப்காட் விரிவாக்கத் திட்டத்தையே கைவிட […]