வேளாண் சட்டங்களை ரத்து செய்வது தொடர்பாக டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்தவுள்ள டிராக்டர் பேரணிக்கு டெல்லி காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், 60 நாட்களுக்கும் மேலாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய அரசு, விவசாயிகளுடன் 11 முறையாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் […]
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக இருந்ததாக ஹரியானா, குஜராத் பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், கடுங்குளிரிலும் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் எதிர்க்கட்சியினர் உட்பட பலரும் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வந்தனர். இவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வந்ததை தொடர்ந்து, மத்திய அரசு 9 முறை பேச்சுவார்த்தை நடத்தியது. அது எதுவும் பலனளிக்காத நிலையில், வேளாண் சட்டங்களை […]
மத்திய அரசு சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து விளக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் 48-வது நாளாக தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு தயாரா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்புள்ளது. மத்திய அரசு வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தினால் […]
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் , விவசாயிகளை அப்புறப்படுத்த கோரிய வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், 40 நாட்களுக்கும் மேலாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், வேளாண் சட்டங்களை திரும்பபெறக்கோரி எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு […]
6-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தும் முன் அமித்ஷா விவசாய சங்கங்களுடன் இன்று இரவு 7 மணிக்கு திடீர் பேச்சுவார்த்தை. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி-ஹரியானா எல்லையில் 13வது நாளாக விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் 5 கட்டங்களாக நடத்தியும், பலன் ஏதும் அளிக்கவில்லை. புதிய சட்டங்களை திரும்ப பெற்றால் மட்டுமே போராட்டம் ரத்து செய்யப்படும் என்று விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதையடுத்து, இன்று பாரத் பந்த் என்ற பெயரில் நாடு முழுவதும் […]
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்குடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று 8 ஆம் நாளாக ஹரியானா, குஜராத் பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்த தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு, டிசம்பர் 3 ஆம் […]
வேளாண் சட்டங்களை எதிர்த்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது தண்ணீர் பீச்சி அடித்த காவல்துறையினர். அதன் பின் விவசாயி செய்த நெகிழ்ச்சியான செயல். மத்திய அரசு கொண்டு வந்த விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லியை இணைக்கும் 5 நெடுஞ்சாலைகள் வழியாக பயணித்து டெல்லியை சென்றடைவது என்பதுதான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் திட்டமாகும். இதனையடுத்து, பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் விவசாயத் திட்டங்களை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகிற நிலையில், அந்த […]
டெல்லி புராரி பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ள நிலையில், மூன்றாவது நாளாக விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண்சட்டங்களுக்கு ஆதரவு ஒருபுறம் இருந்தாலும் ,மறுபுறம் எதிர்ப்பும் இருந்து வருகிறது.இந்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி ஒரு சில மாநிலங்கள் சட்டமன்றத்தில் தீர்மானங்களும் நிறைவேற்றியுள்ளன.குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இந்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் […]
வேளாண் சட்டங்கள் விவசாயத்திற்கு எதிராக இருப்பதால், அதனை எதிர்த்து தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் மத்திய அரசு, வேளாண் சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாக்களை பல எதிர்ப்புகளையும் தாண்டி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாகவும், இந்த மசோதாக்களை எதிர்த்து எதிர்க்கட்சியினர் மற்றும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி கொண்டே வருகின்றனர். இந்தநிலையில், வேளாண் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு சங்கம் […]
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் 3 வேளாண் சட்டங்களும் குப்பை தொட்டியில் வீசப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் போது இரு அவைகளிலும் நிறைவேற்றம் செயயப்பட்டது.இந்த மசோதாவிற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்துவிட்டார். இந்த சட்டமும் அமலுக்கு வந்துவிட்டது. இந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு […]