விருப்பம் இருந்தால் மட்டுமே தனியாரிடம் விவசாயிகள் ஒப்பந்தம் செய்யலாம் என்று வேளாண்துறை முதன்மை செயலர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு மற்றும் வேளாண்துறைச் முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர். அப்போது, அமைச்சர் துரைக்கண்ணு கூறுகையில், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் விவசாயிகளின் வாழ்வு […]
நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக வெங்கையா நாயுடு தலைமையில் ஆலோசனை. மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் அவரது இல்லத்தில் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அவை விதிமுறைகள் அடங்கிய புத்தகங்களை கிழித்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது அவர் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்கள் மீது […]