போராடிய உழவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 300 நாட்களாக உழவர்கள் போராடி வருகிறார்கள். அதனை மத்திய அரசு அலட்சியம் செய்ததன் விளைவுதான் உ.பி மாநிலத்தில் தொடரும் நிகழ்வுகள் ஆகும். மூன்று வேளாண் சட்டங்களை முழுமையாக திரும்ப பெறுவதே ஒட்டுமொத்த அமைதிக்கு வழிவகுக்கும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும். […]
வேளாண் சட்டம் நடைமுறைக்கு வந்த 3 வருடங்களில் ரேஷன் கடைகள் இருக்காது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், கொட்டும் மழையிலும் விவசாயிகளின் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தி வரும் அனைவருக்கும் பாராட்டையும், நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன். கடும் குளிரை கூட பொருட்படுத்தாமல் அறவழியில் தொடர்ந்து லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் […]
ஜனவரி 4ஆம் தேதி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், குறைந்த பட்ச ஆதார விலையை சட்ட ரீதியாக உறுதிபடுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி, 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் டெல்லியில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என்று […]
வேளாண் சீர்திருத்தங்களை தங்கள் ஆட்சியின் போது ஆதரித்த எதிர்க்கட்சிகள் இப்போது விவசாயிகளை தவறாக வழிநடத்துகிறார்கள் என பிரதமர் மோடி குற்றசாட்டியுள்ளார். குஜராத் கட்ச் மாவட்டத்தில் உள்ள தோர்டோ கிராமத்தில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, பின்னர் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, கட்ச் பகுதி அதிவேகமாக வளர்ச்சி பெறுகிறது என்றும் கட்ச் பகுதி மக்கள் ஏமாற்றத்தை நம்பிக்கையாக மாற்றியுள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு ஆதரவான திட்டங்களை குஜராத் அறிமுகப்படுத்தி உள்ளது. […]
புதுச்சேரியில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி ஆதரவு தெரிவித்துள்ளார். புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் இன்று பாரத் பந்த் என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநிலங்களில் ரயில் மற்றும் நெடுஞ்சாலைகளை மறித்து விவசாயகள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, பல்வேறு அரசியல் தலைவர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில், புதுச்சேரியில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டத்திற்கு அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி […]
சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் 8 எம்.பி.க்கள் நடத்தி வந்த தர்ணா போராட்டம் வாபஸ். மாநிலங்களவையை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்ததை அடுத்து தர்ணா போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் உத்தரவாத மசோதா மற்றும் அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிரானவை கூறி, எதிர்கட்சி எம்.பிக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த 3 மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், […]
மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 8 எம்.பிக்கள் உள்பட எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணாவில் ஈடுப்பட்டனர். வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுப்பட்டனர்.எதிர்கட்சியைச் சேர்ந்த எம்.பி.-க்கள் மசோதா நகலை கிழித்து, துணைத்தலைவர் ஹரிவன்சுக்கு எதிராக கோஷமிட்டனர். ஒரு சில எம்பிக்கள் நாடாளுமன்ற நடத்தை விதி புத்தகத்தை கிழித்து துணைத் தலைவரை நோக்கி வீசினர். இதையடுத்து, அமளில் ஈடுபட்ட எதிர்கட்சிகளை சேர்ந்த 8 எம்.பி.க்கள் ஒருவாரம் இடைநீக்கம் […]
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவின் தோழமை கட்சிகள் போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் இந்த மசோதாக்கள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது.இந்த மசோதாக்களுக்கு […]