புதிய வேளாண் சட்டங்கள் நாட்டின் அஸ்திவாரத்தையே பலவீனமாக்கிவிட்டது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். . இது குறித்து கூறிய ராகுல் காந்தி மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் புதிய வேளாண் சட்டங்கள் அனைத்தும் நாட்டின் அஸ்திவாரத்தை பலவீனமாக்கும். எனவே விவசாயிகள் நலன் கருதி அச்சட்டங்களை பிரதமர் மோடி மறுபரிசீலனை செய்யவேண்டும். கொரோனாப் பரவலில் நாடு கடினமான சூழல்களை சந்தித்துவரும் வேளையில், சமூகத்தின் எளிய பிரிவினரான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள், சிறுதொழில்புரிவோர்கள், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட […]
தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகிய ஷிரோமணி அகாலிதளத்திற்கு ஆதரவை தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்வந்துள்ளது. வேளாண் சட்டத்திருத்த மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா உள்ளிட்ட மூன்று மசோதாகளை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிறைவேற்றியது. இதனிடையே, வேளாண் சட்டத்திருத்த மசோதா தொடர்பாக ஷிரோமணி அகாலிதளம் கடந்த சனிக்கிழமை தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறுவது […]