2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா செயல்படுவார்என்று அணி நிர்வாகம் நேற்று அறிவித்திருந்தது. மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனை செயல்பட்டு வந்த ரோகித் சர்மா, 5 முறை சாம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்திருந்தார். இந்த சூழலில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் இருந்து ட்ரேடிங் மூலம் வாங்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இது கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. […]