திருவண்ணாமலையில் விபத்தில் உயிரிழந்த ரசிகர் மன்ற நிர்வாகியின் உடலுக்கு நடிகர் கார்த்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். திருவண்ணாமலையைச் சேர்ந்த ஜீவன்குமார், கார்த்தி மக்கள் நல மன்ற மாவட்ட செயலாளராக உள்ளார். நேற்றுமுன் தினம் தாம்பரம் இரும்புலியூரில் நடைபெற்ற கார்விபத்தில் ஜீவன்குமார், அவரது நண்பர் தினேஷ் ஆகிய இருவர் உயிரிழந்தனர். இந்நிலையில் திருவண்ணாமலையில் உயிரிழந்த ஜீவன்குமாரின் இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தி கலந்து ஜீவன்குமாருக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது துக்கம் தாங்காமல் , நடிகர் கார்த்தி […]