பீகாரின் சாப்ராவில் கள்ள சாராயம் குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது என தகவல். பீகார் மாநிலம் சாப்ரா மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டத்தில் கள்ள சாராயத்தை (hooch) அருந்தியதால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. கள்ள சாராயத்தை அருந்தி அப்பகுதியில் நோய்வாய்ப்பட்ட மற்றவர்களை அடையாளம் காண காவல்துறை தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல் […]