தமிழகத்திற்கு வந்த வடமாநிலத்தவர்கள் சிலர் ஒன்றிய அரசு நிறுவனங்களில் போலியான மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது தெரியவந்துள்ளது. தமிழக தேர்வுத் துறையின் சான்றிதழ் சரிபார்ப்பில் இந்த மோசடி அம்பலமாகியுள்ளது. 200க்கும் அதிகமான வடமாநிலத்தவர்கள் இவ்வாறு போலி சான்றிதழ் கொடுத்து அஞ்சல் ஊழியர், இந்தியன் ஆயில் நிறுவனம், சிஆர்பிஎஃப் ஆகிய பணியில் சேர்ந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அசாமில் போலி சான்றிதழ்கள் மூலம் வேலை வாய்ப்பு பெற்ற 36 ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் வேலை பெறுவதற்கு சில ஆசிரியர்கள் போலியான TET தகுதி சான்றிதழை சமர்ப்பித்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் பணியில் உள்ள ஆசிரியர்களின் தகுதி சான்றிதழ்களை முறையாக விசாரிக்குமாறு அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இதன் அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர்களின் தகுதி சான்றிதழ் சோதனை செய்யப்பட்டுள்ளது. பின் அசாமில் உள்ள […]