மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாக குறுஞ்செய்தி வந்தால் கவனமாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபத்தில், தமிழகத்தில் மின் கட்டணம் கட்டவில்லை என்றும் மின் இணைப்புத் துண்டிக்கப்படும் எனவும் குறுஞ்செய்தி அனுப்பி, அதில் லிங்கை க்ளிக் செய்ய வைத்து மக்களிடையே மோசடி செய்யும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றனர். இந்த நிலையில், மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற குறுஞ்செய்தி போலியானது என தமிழக மின்சார வாரியம் […]
வங்கி கணக்கு குறித்து SMS அல்லது செல்போன் அழைப்பு வந்தால் அதை பொருட்படுத்த வேண்டாம் என்று எஸ்பிஐ வங்கி வேண்டுகோள். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளை அணுக தனிப்பட்ட மற்றும் வங்கித் தகவல்களைக் கேட்கும் போலி எஸ்எம்எஸ் எச்சரிக்கைகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளது. அதாவது, வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக SMS அல்லது செல்போன் அழைப்பு வந்தால், அதை பொருட்படுத்த வேண்டாம் என்று வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது. ஏதேனும் […]
பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக கைதானவர்கள் கொல்லப்பட்டது போலி என்கவுண்டர். கடந்த 2019-ஆம் ஆண்டு ஐதராபாத்தில் பெண் மருத்துவர் ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்டு அவரை எரித்திருந்தனர். இதுதொடர்பாக 4 பேரை உடனடியாக காவல்துறை கைது செய்ததிருந்தது. இதன்பின் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக கைதான 4 பேர் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர் என தகவல் வெளியாகியிருந்தது. இது பல்வேறு சர்ச்சை, பல விவாதங்களை இச்சம்பவம் ஏற்படுத்தி இருந்தது. இதுதொடர்பாக […]
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜன.25 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று CBSE வெளியிட்டுள்ளதாகக் கூறப்படும் சுற்றறிக்கை போலியானது என்று சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(சிபிஎஸ்இ) கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் டேர்ம் 1 போர்டு தேர்வுகளை நடத்தியது.இந்நிலையில்,மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (சிபிஎஸ்இ) 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஜனவரி 25 ஆம் தேதி வெளியிடப்படும் என்று […]
கடந்த சில தினங்களுக்கு முன்பதாக சமூக வலைதளங்களில் அனைத்து கல்லூரிகளிலும் இனி நேரடித் தேர்வு மட்டுமே நடத்தப்படும் என்று யுஜிசி அனுப்பியதாக வெளியான கடிதம் போலியானது. கொரோனா தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தொற்று குறைந்ததை தொடர்ந்து பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கல்வி நிறுவனங்கள் திறப்புக்கு முன்பாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டு தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டு வந்த […]
செப்டம்பர் 5 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறுவதாக வந்த தகவல் தவறானது என்று தேசிய தேர்வு மையம் விளக்கமளித்துள்ளது. தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு (நீட்) செப்டம்பர் 5 ஆம் தேதி நடத்தப்படும் என்று சமூக ஊடகங்களில் ஒரு அறிவிப்பு பரவி வருகிறது.அத்தகைய அறிவிப்பு போலியானது மற்றும் மார்பிங் செய்யப்பட்டது.மேலும், மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்கான தேதிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தேசிய தேர்வு மையம் (என்.டி.ஏ) அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். JEE முதன்மை 2021 […]
கொரோனா வைரஸ் 2 வது அலை பரவுவதற்கு 5ஜி நெட்வொர்க்கின் கதிர்வீச்சு காரணம் என சமூகவலைதளங்களில் வெளியாகும் தகவல் உண்மை இல்லை இன்று மத்திய தகவல் தொலைத்தொடர்பு துறை தெரிவித்துள்ளது. மத்திய அரசானது 5ஜி சோதனை செய்ய 13 நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில்,கொரோனா வைரஸின் 2 வது அலை பரவுவதற்கு 5 ஜி நெட்வொர்க்கின் பரிசோதனையே காரணம்.ஏனெனில்,அதில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு காற்றை நச்சுத்தன்மை உடையதாக […]
என் பெயரில் டிவிட்டரில் போலி கணக்கு தொடங்கி பதிவு செய்து வருகிறார்கள். நடிகை வித்யா பிரதீப், அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்தவர். இவர் சின்னத்திரையில், நாயகி என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். மேலும் இவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இணைய பக்கத்தில், சினிமா பிரபலங்களை குறி வைத்து போலி கணக்குகள் உருவாக்கப்படுகிறது. அந்த வகையில், நடிகை வித்யா […]
போலியான தகவல் வெளியிட்டதற்காக, நடிகர் விஜய் சேதுபதி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம். இன்று திரையுலக பிரபலங்களின் பெயரில், சமூக வலைத்தளங்களில் போலியான கணக்குகள் தொடங்கப்பட்டு, அதில் போலியான தகவல்களை பரப்பி வரும் சம்பவங்கள் மிக சாதாரணமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, ஜோதிகாவின் பேச்சுக்கு தான் ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டதாக வெளியான போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு, இது போலியானது என்று மறுப்பு தெரிவித்துள்ளார். ஏற்கனவே, நடிகர் விஜய் சேதுபதி […]
அண்ணா பல்கலைக்கழகத்தின் விடைத்தாள் பணியில் ஈடுபட்ட பேராசிரியர்களுக்கு TDS எனப்படும் வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையை முறையாக செலுத்தவில்லை எனக் கூறி, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் சிலரின் பிஎச்டி சான்றிதழ்களை, அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வுசெய்தபோது, போலி என கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும், அண்ணா பல்கலைக்கழக பதிவாளா் கருணாமூர்த்தி அறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில், 2020-21ம் கல்வியாண்டு இணைப்பு அங்கீகாரம் […]
கடந்த புதன்கிழமை வடோதராவில் 32 வயது மதிப்புள்ள அபிஷா சுர்வே மற்றும் சுமித் நம்பியார் ஆகிய இரண்டு இளைஞர்கள் கள்ள 500 ரூபாய் நோட்டுகளை வைத்து பொருட்கள் வாங்க முயற்சி செய்து உள்ளனர். அப்போது அவர்களை பொதுமக்கள் பொலிசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் அபிஷா சுர்வே 152 கள்ள 500 ரூபாய் நோட்டுகளையும் , சுமித்திடம் 23 கள்ள 500 ரூபாய் நோட்டுகளையும் போலீசார் கைப்பற்றினர்.மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் சூரத் நகரை சார்ந்தவர்கள் என்றும் […]
கன்னியாகுமரியில் கள்ள நோட்டு கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. கேரளாவிற்கு போதை பொருட்கள் கடத்துவதாக போலீசாருக்கு புகார் ஓன்று வந்தது.இதனை தொடர்ந்து கன்னியாகுமரியில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபரை கண்காணித்து வந்தனர். இதனை தொடர்ந்து சபத் என்பவர் கைது செய்யப்பட்டார்.இந்த நபர் தங்கியிருந்த அறையில் நடத்திய சோதனையில் ரூ.200,500 அச்சடிக்கும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.77000 மதிப்புள்ள கள்ளநோட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 4 பேரை கைது செய்தது போலீசார். தீவிர விசாரணை […]
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று கூறி புறநோயாளியிடம் பணம் பறித்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் தன்னை மருத்துவர் என்று கூறி, ஸ்கேன் எடுக்க 800 பணம் கட்ட வேண்டும் என்று வாங்கிச் சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் வராததால், நடந்ததை மருத்துவர் […]
பிக்பாஸ் மூலம் பிரபலமானவர்களில் முக்கிய இடத்தை பிடித்தவர் ஜூலி இவர் பேசு பேச்சால் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பிரபலமடைந்தார் அதனை தொடர்ந்து பிக்பாசில் ஒரு இடத்தை பிடித்தார் பிரபல சீரிவியில் தொகுப்பாளாரான ஜூலி சிறுவர் நடன நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கிவருகிறார். சில நாட்களுக்கு முன்பு அந்நிகழ்ச்சியின் நடுவரான கலா மாஸ்டருடன் சேர்ந்து ஒரு நடனம் ஆடினார். தற்போது அவர் மட்டும் ஒரு நடனம் ஆடியுள்ளார். அதில் சாவு குத்தும் கடைசியில் ஆடியது காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ரசிகர்களிடம் […]