தேர்தல் முடிவுகள் : பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அயோத்தி நகரத்தை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் எதிர்பாராத முறையில் தோல்வியைச் சந்தித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு, பாஜகவின் மக்களிடம் பெரும் ஆதரவை எதிர்பார்த்திருந்த நிலையில், சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் அவதேஷ் பிரசாத், பாஜகவின் தற்போதைய எம்.பி.லல்லு சிங்கை தோற்கடித்து வெற்றி பெற்றார். 5,27,005 வாக்குகள் பெற்று அவதேஷ் பிரசாத் வெற்றிபெற்ற நிலையில், எம்.பி.லல்லு சிங் 4,72,222 வாக்குகள் பெற்று 5,47,83 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். […]
ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் நகருக்கு 33 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு. இன்று ஆப்கானிஸ்தானில் அதிகாலையில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானது. நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, இன்று அதிகாலை 3.47 மணியளவில் ஆப்கானிஸ்தானின் பைசாபாத் நகருக்கு மேற்கே 33 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் இதுவரை உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை. முன்னதாக […]
ஆப்கானிஸ்தானில் பைசாபாத் பகுதியில் 5.0 அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள வடகிழக்கு நகரமாகிய பைசாபாத் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி காலை 5.50 மணிக்கு ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான் பைசாபாத் பகுதியிலிருந்து சுமார் 106 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்நிலநடுக்கம் 1.37 நீளமும் 150 கிலோ மீட்டர் ஆழமும் கொண்டிருந்ததாகவும் தேசிய புவியியல் […]