கயத்தாறு, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகாவில் உள்ள கடம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு குழந்தை இறந்து பிறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பணியில் டாக்டர் இல்லாததே காரணம் என அந்த பெண்ணின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். கடம்பூர் மேல ரத வீதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி செல்வராணி (வயது 23). கர்ப்பமாக இருந்த இவர் கடம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த செல்வராணிக்கு நேற்று குழந்தை பிறக்கும் என்று […]