மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், 5 பேர் காயமடைந்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் போய்சாரில் உள்ள ஜகாரியா ஃபேப்ரிக் லிமிடெட் எனும் தொழிற்சாலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென பரவத் தொடங்கியதால், உடனடியாக தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திலிருந்து உயிரிழந்த ஒருவரின் […]