சென்னை : ஒரு வாக்காளராக நான் ‘தமிழக வெற்றிக் கழக மாநாட்டில்’ கலந்து கொள்வேன் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27-ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஷால், செய்தியாளர்கள் சந்திப்பில் தவெக மாநாடு குறித்துபேசியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், […]