ஃபேஸ்புக் நிறுவனம், தீவிரவாத இயக்கங்கள் தொடர்பாக பதிவிடப்பட்ட 10 லட்சத்துக்கும் அதிகமான கருத்துகளை நீக்கியது. இதை தொடர்ந்து எதிர்காலத்தில் தீவிரவாதம், வன்முறை, போதைப் பழக்க வழக்கங்களை தூண்டும் வகையிலான பதிவுகளை நீக்கும் வண்ணம் புதிய விதிமுறைகளை அந்நிறுவனம் வகுத்துள்ளது. இதன்படி ஃபேஸ்புக் பயனாளராக இருப்பவர், தமக்கு வேண்டாத கருத்துகளை பதிவிட்டவர்களை நீக்குவது மட்டும் அல்லாமல் அந்த கருத்துகள் பரவுவதை தடுக்கும் வகையில் புகார் அளிக்கவும் முடியும்.